வாக்குக்கு பணம் தந்தால் தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கே தரவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

196

வாக்குக்கு பணம் தந்தால் தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கே தரவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேர்தல்கள் குறித்த தேசிய மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் சட்ட ஆராய்ச்சியாளர்கள், சட்ட நிபுணர்களுடன் ஒன்றிணைந்து தேர்தல்கள் தொடர்பான
சட்டத்தை பரிசீலனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார். தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது முறைப்படுத்தப்பட்ட விதத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய நடைமுறை என்று கூறிய நஜீம் ஜைதி, இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட 47 பரிந்துரைகளை தொகுத்து வழங்கி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். அரசியலிருந்து கிரிமினல்களை ஒழிப்பது, பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது, அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்துள்ளதாக கூறிய அவர், வாக்குக்கு பணம் தந்தால் அந்த தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கே தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற பரிந்துரைகளை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்தால் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.