தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

337

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. தஞ்சை தொகுதியில் 69 புள்ளி 41 சதவீதமும் அரவக்குறிச்சியில் 82 புள்ளி 15 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதேபோல, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிமுதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேஜைக்கும் தலா 42 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். இதில், வேட்பாளர்களின் தரப்பில் ஒரு முகவர் அனுமதிக்கப்படுவார் என்றும், ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், வேட்பாளர்களின் தலைமை முகவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு சுற்று முடிவுகளும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். இதன்படி நாளை மதியத்திற்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.