தம்மை காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த பாதுகாவலர் மனைவியின் காலில் விழுந்த இலங்கை நீதிபதி !

591

தம்மை காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த பாதுகாவலர் மனைவியின் காலில் விழுந்து இலங்கை நீதிபதி கதறி அழுத சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மாணிக்க வாசக இளஞ்செழியன். நேர்மையான நீதிபதி என அந்நாட்டு மக்களால் போற்றப்படும் இவர், மாணவி பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் நீதிபதி இளஞ்செழியனை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, கடந்த வாரம் காரில் சென்று கொண்டிருந்த நீதிபதியை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், நீதிபதியை காப்பாற்ற முயன்ற அவரது பாதுகாவலர் சரத் பிரேமசந்திரா என்பவர்
உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக நீதிபதி எந்த காயமின்றி உயிர் தப்பினார். தனக்காக தமது பாதுகாவலர் உயிர் நீத்தது நீதிபதிக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதுகாவலரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்,கலந்து கொள்வதற்காக அவரது வீட்டுக்கு சென்ற நீதிபதி இளஞ்செழியன், துக்கம் தாங்காமல் அவரது மனைவியின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் காண்போரின் நெஞ்சை பதற செய்தது.