அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்கக்கோரிய வழக்கில் சசிகலா மற்றும் தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

187

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்கக்கோரிய வழக்கில் சசிகலா மற்றும் தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதாவை மீட்டுதரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், அதிமுகவினரால் 131 சட்டப்பேரவை உறுப்பினர்களும் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், அவர்களுக்கு உணவுக்கூட வழங்காமல் அடைத்துவைத்திருப்பதாகவும் அவர் வாதிட்டார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், 131 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.