உத்தரகாண்டில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான டேக்வாண்டா போட்டி

87

உத்தரகாண்டில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான டேக்வாண்டா போட்டியில் சேலம் எளம்பிள்ளை பகுதியை சேர்ந்த வீரர்கள் தங்கம், வெங்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

உத்தகாண்டில் அகில இந்திய அளவிலான டேக்வாண்டா போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடின. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற சேலம் மாவட்டம் எளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ராம்குமார், சக்திவேல் ஆகிய வீரர்கள் தங்கப்பதக்கமும், சிவராஜ், கண்ணன், ஹரிகரன், பிரபுதேவா ஆகிய நான்கு பேர் வெங்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், தாய்நாடு திரும்பிய வீரர்களுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மேளதாலங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அகில இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த வெற்றியை தங்கள் குடும்பத்திற்கும், கிராமத்திற்கும் சமர்ப்பணம் செய்வதாக தங்கம் வென்ற இளைஞர் ராம்குமார் தெரிவித்தார்