மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

221

உத்தரகாண்ட் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம், பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நனிதானா மலைப்பகுதியில் ஸ்ரீநகரை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். குறுகளான மலைப்பகுதியில் செல்லும் போது ஓட்டிநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அறுவது அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.