உத்தரபிரதேசத்தில் மீண்டும் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

158

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா பகுதியில் சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனதில், மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழ் இறங்கின. சரக்கு ரயில் என்பதாலும், வேகம் குறைவாக வந்தமையாலும் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். மற்ற ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.உத்தரபிரதேசத்தில், கடந்த 3 மாதங்களில் மட்டும் நடைபெறும் 5வது ரயில் விபத்து இதுவாகும். ஆகஸ்டு மாதம் 19ம் தேதியன்று, நிகழ்ந்த ரயில் விபத்தில் 24 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.