உத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது..!

183

உத்தர பிரதேசத்தில் 128 கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தும்படி பில் வந்தது முதியவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் வசித்து வரும் ஷமிம் என்பவருக்கு 128 கோடி ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்துமாறு மாநில மின்சார வாரியம் ரசீது அனுப்பி வைத்துள்ளது.

இதுதொடர்பாக, ஷமிமுக்கு மின்சாரத் துறை அனுப்பிய ரசிதில் 2 கிலோவாட் வீட்டு இணைப்புக்கு 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த ஷமிம், பிழையை சரிசெய்ய மின்சாரத் துறையை அணுகியபோது, கட்டணத்தை செலுத்த வேண்டும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஷமிம் கட்டணம் செலுத்த தவறியதை அடுத்து, அவரது வீட்டுக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.