உத்தர பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வராததால் சாலையிலேயே குழந்தை பெற்ற பெண்!

297

உத்தர பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் பெண்ணுக்கு சாலையிலேயே குழந்தை பிறந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அங்கு ஆம்புலன்ஸ் வராததை அடுத்து அவசர மருத்துவ உதவிக்குழுவை உறவினர்கள் நாடியுள்ளனர். மருத்துவ குழுவும் அங்கு வராத நிலையில் பிரசவ வலியில் துடித்த அந்த பெண்ணை உறவினர்கள் இரு சக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், குழந்தைக்கும், பெண்ணுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உத்தர பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மனிதர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.