கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

405

கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தமிழக அரசு மீது மத்திய அரசு பாசம் வைத்திருப்பதாக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டு அடுக்கு பெட்டிகளை கொண்ட உதய் ரெயில் கோவை – பெங்களூரு இடையே இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹைன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர்.

இரண்டு அடுக்குகள் கொண்ட உதய் ரெயில் முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகும். தானியங்கி உணவு வழங்கும் இயந்திரங்கள் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளன. எல்சிடி திரைகள், வைஃபை வசதி, செயற்கைக்கோள் இணைப்பில் இயங்கும் ஜி.பி.எஸ். மூலமாக ரயில் நிலையங்கள் வருகை குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வசதியும் உதய் ரெயிலில் உள்ளது.