அசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..!

275

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடுகடத்தக்கூடாது என அவரது ஆதரவாளர்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தற்போது பாலியல் குற்றச்சாட்டின் பேரில் லண்டனில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்ககோரி அந்நாடு பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் லண்டன் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும் அவரை விடுதலை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து கூறிய பிரிட்டன் உள்துறை செயலாளர்,சாஜித் ஜாவித் அமெரிக்காவின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும் என்று திட்ட வட்டமாக கூறினார் .