கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

205

கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, இருமாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து 6 நாட்களுக்கு பின் இருமாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில், தமிழக வாலிபர் கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் அருகே தமிழக பேருந்தின் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பேருந்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூருடன் திருப்பி விடப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.