அமெரிக்காவில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயிரத்து 503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

224

அமெரிக்காவில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயிரத்து 503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரெஸ்னோ நகரை சேர்ந்த ரேனே லோபெஸ் என்பவர் தன்னுடைய மகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால்,
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வயது தற்போது 23 ஆன நிலையில், அவர் போலீசில் இதுதொடர்பாக, புகார் கொடுத்துள்ளார். கடந்த 2009 மே மாதம் முதல் 2013ம் ஆண்டு வரை தன்னை
மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ரேனே லோபெஸ்ஸை கைது செய்த போலீஸார், பிரெஸ்னோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்ட் சர்சியன் குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த மாதம் ரேனே லோபெஸ்ஸை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், இந்த தண்டனை விபரத்தை தற்போது அறிவித்துள்ளது. தனது மகளின் இளமைக்காலத்தை நாசப்படுத்திய குற்றத்துக்காகவும், இதுபோன்ற சமுதாயத்துக்கு மிகவும் தீமையான மனிதர்களை வெளியே நடமாட விடக்கூடாது என்பதற்காகவும் இந்த அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி எட்வர்ட் சர்கிசியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.