அமெரிக்க அதிபர் ட்ரம்பை விமர்சித்த உள்கட்சி எம்.பி-கள் | எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு …!

378

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து விமர்சித்த அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவின் செனட் சபையில், எம்.பி-கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய அரிசோனா மாகாண எம்.பி ஜெஃப் பிளேக், பொறுப்பற்ற முறையில் ஆட்சி செய்து வரும் டொனால்டு ட்ரம்புடைய அரசின் நடத்தைகளால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என்று விமர்சித்தார். இதே போல் பாப் கார்க்கர் என்ற எம்.பி.யும் அதிபர் ட்ரம்ப் ஒரு பொய்யர் என கடுமையாக விமர்சித்தார். சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி-கள் ட்ரம்பை குறை கூறி பதவியில் இருந்து விலகி இருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதையடுத்து இந்த இரண்டு உறுப்பினர்களுக்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய ஹிலாரி கிளிண்டன், ட்ரம்புடைய அரசுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என கேட்டுகொண்டார்.