அமெரிக்காவில் பரவி வரும் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

219

அமெரிக்காவில் பரவி வரும் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டு தீ கொளுந்து விட்டு எரிகிறது.அங்குள்ள தாவரவியல் பூங்காவில் தீ வேகமாக பரவி வருவதால் வானுயரந்த மரங்கள், செடிகொடிகள் தீயில் கருகி சாம்பலாகின.பல ஏக்கர் பரப்பில் தீ கட்டுங்கடங்காமல் எரிவதால் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறப்பட்டனர். அருகில் இருந்த நீர்நிலைகளில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டு உள்ளனர்.