யு.எஸ்.சேலஜ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்திய வீரா் ராம்குமார் ராமநாதன், நியூசிலாந்து வீரரை வீழ்த்தினார்.

308

யு.எஸ்.சேலஜ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்திய வீரா் ராம்குமார் ராமநாதன், நியூசிலாந்து வீரரை வீழ்த்தினார்.
அமெரிக்காவில் உள்ள பிங்ஹாம்டன் நகரில் யு.எஸ்.சேலஜ்சர் டென்னிஸ் தொடருக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவிற்கான போட்டியில், இந்திய வீரா் ராம்குமார் ராமநாதன், நியூசிலாந்து வீரா் ஜோஸ் ஸ்டாதம்மை எதிர்கொண்டார்.
இரண்டு மணி நேரம் 22 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில், அபாரமாக ஆடிய ராம்குமார் ராமநாதன், 2-க்கு 6, 6-க்கு 4, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதனிடையே, இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், கஜகஸ்தானின் ஆன்ட்ரே கோலுபெவ் ஜோடி பிரிட்டனின் லியாம் பிராடி ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.