வருமானவரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது : ஆக. 31 வருமானவரி செலுத்த கடைசி நாள்

212

காலக்கெடுவுக்குள் வருமானவரி செலுத்தாத நபர்களுக்கு அபராதம் விதிக்க வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டிற்கான வருமானவரியை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டது. எனினும் ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்துவதில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவித்த வருமான வரித்துறை, கொடுக்கப்பட்டுள்ள கெடுவுக்குள் வருமான வரி செலுத்தாத நபர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

மொத்த வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் வருமானவரிக் கணக்கை வரும் 31-ம் தேதிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராதமாக ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் எனவும், 5 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் வரும் 31-ம் தேதிக்குப் பிறகு, ஆனால் டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதமாக 5 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ள வருமான வரித்துறை, மொத்த வருமானம் 5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, ஆனால் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.