திமுக செயற்குழு அவசர கூட்டம் வரும் 14ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிப்பு..!

329

திமுக செயற்குழு அவசர கூட்டம் வரும் 14ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், திமுக செயற்குழு அவசர கூட்டம் வரும் 14ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், வரும் 14 ஆம் தேதி கூட இருக்கும் செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் கருணாநிதியின் நினைவிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.