உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுடன் சேர்ந்து சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றினார்.

182

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுடன் சேர்ந்து சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றினார்.
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக பதவியேற்ற ஆதித்யநாத், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இறைச்சிக்கூடங்களுக்குத் தடை, ஆன்டி-ரோமியோ படை என்ற அவரின் அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, மலிவு விலையில் உணவளிக்கும் ’அன்னபூர்ணா கேன்டீன்’ திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், லக்னோவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தூய்மை இந்தியா திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது, முதலமைச்சருடன் அமைச்சர்களும் சேர்ந்து, சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.