சந்திராயன்-2 திட்டத்திற்கு காங். அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை..!

82

சந்திராயன் 2 திட்டத்தை 2012ம் ஆண்டே செயல்படத்த முயன்றதாகவும் ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் குற்றம்சாட்டியுள்ளார். சந்திராயன் 2 திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2008-ம் ஆண்டு சந்திராயன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து சந்திராயன் 2 திட்டத்தை 2012-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயத்தமானதாகவும், ஆனால் 2014 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சந்திராயன் 2 திட்டத்திற்கு அப்போதைய மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்தார். சந்திராயன் 2 திட்டத்திற்கு பதில் மங்கள்யான் திட்டத்தை நிறைவேற்றுமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் மாதவன்நாயர் குறிப்பிட்டார்.