ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை..!

583

உத்தரப்பிரதேச மாநிலம் அலஹாபாத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கூலிப் படையால் அடித்துக் கொல்லப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அப்துல் சமத் கான். மிதிவண்டியில் வரும் இவரை கீழே தள்ளி ஒருவன் நீண்ட தடியால தாக்கத் தொடங்கும் நிலையில் சற்று நேரத்தில் மேலும் இருவரும் சேர்ந்து கொள்ள மூன்று பேரும் சரமாரியாக தாக்குகின்றனர். அப்போது அக்கம்பக்கத்தினரோ வாகனத்தில் செல்பவர்களோ உதவி செய்ய அஞ்சி திரும்பி ஓடும் அதிர்ச்சி காட்சிகளும் பதிவாகியுள்ளன.

கூலிப் படையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அப்துல் சமத் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொத்து தகராறு காரணமாக உறவினர்கள் கூலிப் படையை ஏவியதாக தெரிவித்துள்ள போலீசார், இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.