தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர் ..!

695

உத்தரபிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில், தனியார் பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 35 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுனர், அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .