பைசாபாத், அலகாபாத் ஆகிய நகரங்களின் பெயரை மாற்ற உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பைசாபாத் மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. பைசாபாத் நகரத்தின்பெயரை அயோத்தி என்றும் அலகாபாத் என்ற நகரத்தின் பெயரை, பிரயாக்ராஜ் என்றும் மாற்றப்படும் என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில், உத்தரபிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றது.

இதில் நகரங்களின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, பைசாபாத், அலகாபாத் ஆகிய நகரங்கள் விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.