உத்தரபிரதேச மாநிலத்தில் 3வது நாளாக ராகுல் காந்தி, பொதுமக்களிடையே பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

229

உத்தரபிரதேச மாநிலத்தில் 3வது நாளாக ராகுல் காந்தி, பொதுமக்களிடையே பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
உத்திரபிரதேச மாநிலத்திற்கு, அடுத்த ஆண்டு சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி 3வது நாளாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பேஸ்டிரி நகருக்கு செல்லும்போது வழிநெடுங்கிலும் பொதுமக்கள், விவசாயிகள், கட்சித் தொண்டர்கள் ஆகியோர் சாலையின் இருபுறங்களிலும் ராகுல்காந்திக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அளிக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். மத்திய அரசு மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருவதாக ராகுல் குற்றம்சாட்டினார்.