உத்­த­ரப்­பி­ர­தே­சத்தில் மீண்டும் துணி­கரம்: துப்­பாக்கி முனையில் ஆசிரியை கற்­­ப­ழிப்பு! 3 பேர் கும்ப­லுக்கு வலை­வீச்சு!!

288

லக்னோ, ஆக.3–
உத்­த­ர­ப்­பி­ர­தேச நிலைமை அத்­து­மீறி சென்றுக் கொண்­டி­ருக்­கி­றது. இத­னால் முதல்வர் அகிலேஷ் யாதவின் பத­விக்கு நெருக்­­கடி முற்று­கி­றது. நிலை­மையை கட்­டுக்குள் கொண்டு வர முடி­யாமல் போலீசார் திணறி வரு­­கின்­றனர்.
உத்­த­ரப்­பிர­தே­ச மாநி­லம் பரே­லி தொகு­தியில் இந்த அதிர்ச்­சிக்­க­ர­மான சம்­பவம் நடந்­தது. நேற்று வழக்­கம்­­போல அந்த ஆசிரியை பள்­ளிக்கு நடந்து சென்று கொண்­டி­ரு­ந்தார்.
அப்­போது காரில் வந்த 3 பேர் கும்பல் அவரை காருக்குள் இழுத்து கற்­ப­ழித்­தனர். அத்­துடன் இதனை செல்போ­னி­லும் பதிவு செய்­தனர். புகார் கூறினால் இதனை சமூக வலைத்­த­ளங்­களில் வெளியிட்டு விடு­வோம் என்று மிரட்­டி­யுள்ளனர்.
இருப்­பினும் அந்த ஆசி­ரியை துணிச்­ச­லுடன் புகார் கொடுத்­­துள்ளார். இதை­ய­டுத்து போலீசார் வழக்­குப்­ப­திவு செய்­து 3 பேர் கும்­ப­லை தேடி வரு­கின்­ற­னர். 24 மணி நேரத்தில் குற்­ற­வா­ளி­களை கைது செய்ய வேண்டும் என்று முதல்வர் அகி­லேஷ் யாதவ் உத்­த­ர­விட்­டுள்ளார்.
ஏற்­க­னவே அங்கு கடந்த சில­ நாட்க­ளுக்கு முன்பு டெல்­லியில் இருந்து உ.பி.க்கு வந்து கொண்­­டி­ருந்த காரை வழி­­­­ம­றித்து 35 வயது பெண்­ணையும், அவ­ர­து 14 வயது மக­ளையும் ஒரு கும்பல் வழிம­றித்து கற்­ப­ழித்­தது.
இச்­சம்­ப­வத்தில் முழு­மை­யாக துப்பு துலங்க வில்லை. 3 பேர் மட்டும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் அங்கு மீண்டும் மீண்­டும் நடக்கும் கற்­ப­ழிப்பு சம்­ப­வங்கள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு கடும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
ஏற்­க­ன­வே முன்னாள் முதல்வர் மாயா­வதி அளித்த பேட்­டியில், ‘ஆட்­சி செய்ய முடி­யா­விட்டால் பத­வியை விட்டு இறங்­குங்கள் ’ என்று கடு­மை­யாக கருத்து கூறி­யி­ருந்தார். இத­னா­ல் அகிலேஷ் நெருக்­க­டியில் தவித்து வரு­கிறார்.
அம்­மா­நி­லத்தில் அடுத்த ஆண்டு சட்­ட­மன்ற தேர்­தல் நடை­பெற உள்ளது. இந்நி­லையில் மாநி­லத்­தின் சட்­டம்–­ஒ­­ழுங்கை கேள்­விக்­கு­றி­யா­க்கும் வகையில் தொடர்ந்து கற்­­ப­ழிப்பு சம்­ப­வங்கள் நட­ப்­பதை கண்டு சமாஜ்­வாடி அதிர்­ந்து போய் உள்­ளது.
இத்­தனை காலம் நடக்காமல், இப்­போது மீண்டும் மீண்டும் கற்­ப­ழி­ப்பு சம்­ப­வங்கள் நடப்­பதால் ரவு­டிக்­கும்­பலை எதிர்­க்­கட்­சிகள் திட்­ட­மிட்டு ஏவி விட்­டு வேடிக்கை பார்க்­கின்­ற­னவா? என்ற கேள்­வியும் சமாஜ்­வாதி கட்சி மனதில் எழுந்­துள்­ள­து.