இனயம் துறைமுக திட்டத்துக்கு எதிராக கன்னியாகுமரியில் 12 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

243

இனயம் துறைமுக திட்டத்துக்கு எதிராக கன்னியாகுமரியில் 12 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடைபெறும் இந்த போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இனயம் துறை முகம் திட்டம் குறித்து ஒரே மேடையில் விவாதிப்பதற்கு இதுவரை மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பதில் அளிக்க வில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். மக்களின் போராட்டத்தை மீறி இனயம் துறைமுகம் அமைக்க விட மாட்டோம் என்று அவர்கள் கூறினர். தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தால் அப்பகுதியில் உள்ள 150 விசை படகுகள் மற்றும் 250 நாட்டு படகுகள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீனவர்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.