முதல்வருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..!

243

சென்னை பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் வைரவிழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டம் சார்ந்த ஆறு மாணவர்கள் முதல்வர் பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களை கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றஞ்சாட்டினர்.