ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி பாராட்டு | பழமை மாறாமல் நடைபெற்ற கும்பாபிஷேகம் …!

304

பழமை மாறாமல் சிறந்த முறையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொண்டதற்கு யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி பாராட்டியுள்ளது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் முன்மையாக விளங்குகிறது. பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்ற இந்த கோயில், தமிழர்களின் கலாச்சார கருவூலமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட ஸ்ரீரங்கம் கோயில் 10 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து நவம்பர் 2015-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில், பழமை மாறாமல் சிறந்த முறையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொண்டதற்கு, யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி பாராட்டியுள்ளது. இதனால், கோயில் ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கோபுரத்தின் முன்பு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.