2016ம் ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.1,016 கோடி கடந்தாண்டு 2 கோடியே 66லட்சம் பக்தர்கள் தரிசனம்.

307

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் மூலம் கடந்த ஆண்டு ஆயிரத்து 16 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் வருகின்றனர். அவர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல் மூலம் சேகரிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டு மட்டும் 2 கோடியே 66 லட்சம் பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் தங்களுடைய காணிக்கையை பணமாகவும்,
தங்க, வெள்ளி, வைர ஆபரணங்களாகவும் செலுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, உண்டியல் வருமானமாக ஆயிரத்து 16 கோடி வருமானமாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.