மலிவு விலை அம்மா உணவகம் காங்கிரஸ் கட்சியின் திட்டம் என்று, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். !

385

மலிவு விலை அம்மா உணவகம் காங்கிரஸ் கட்சியின் திட்டம் என்று, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் 198 இடங்களில் மலிவு விலை கேன்டீன்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன. இந்திரா உணவகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகங்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திறந்து வைத்தார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, அம்மா உணவகம் காங்கிரஸ் கட்சியின் திட்டம் என்று கூறினார். இந்தத் திட்டத்தின்படி காலை உணவு 5 ரூபாய்க்கும், மதியம் மற்றும் இரவு உணவுகள் 10 ரூபாய்க்கும் கிடைக்கும் என்று அவர் கூறினார். பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று ராகுல் தெரிவித்தார்.