தனி ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஐ.நா மாநாட்டில் வைகோ வலியுறுத்தல்!

368

தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமை மாநாட்டில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐ.நா.மனித உரிமை ஆணைய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள மதிமுக பொதுசெயலாளர் வைகோ இலங்கை போரின் போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து பேசி வருகிறார். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வைகோ, 2013 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஈழ தமிழ் தேசம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். இதே போன்று அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநில சட்டசபையில் 1979 ஆண்டு ஈழ தமிழ் தேசம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈழத்தமிழர்களுக்கான நியாயமான தீர்மாணங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இந்தியாவுடன் இணைந்து ஈழத்தமிழர் படுகொலையை நிகழ்த்த இலங்கைக்கு உதவி புரிந்ததாக அவர் குற்றம்சாட்டினார். மனித உரிமைகள் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலம் ஈழ தேசத்தை அமைக்க முன்வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.