நாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..!

189

இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் பிரதமராக தொடர்ந்து தாம் நீடிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உள்ளதென்றும் விக்ரமசிங்கே கூறி வருகிறார்.
இந்தநிலையில் ராஜபக்சே உடனடி பலப்பரீட்சையை தவிர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா 16-ந்தேதி வரை முடக்கி வைப்பதாக அறிவித்தார்.
இதனால் இலங்கை அரசியலில் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் ராஜபக்சே நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடும் என தெரிவித்தார். பின்னர் ராஜபக்சேயின் ஆதரவாளர்கள் அதனை மறுத்தனர்.

அதேநேரம் 16-ந்தேதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாது என்று அதிபர் சிறிசேனா கட்சியினர் தெரிவித்தனர். இதனால் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன்றம் வரும் 7 ஆம் தேதி கூடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. பரபரப்பான இந்த சூழலில், இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் தொலைபேசியில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்டர்ஸ், நாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.