ஐ.நா.வின் புதிய பொதுச்செயலர் பதவிக்கு ரகசிய ஓட்டெடுப்பு. 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டியில் பங்கேற்பு.

226

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலர் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஓட்டெடுப்பில்
பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 பேர் போட்டியிடுகின்றனர்.
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த பொதுச் செயலர் பதவிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்த பொதுச்செயலரை 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு தேர்ந்தெடுக்கும் என்றும் இதையொட்டி அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த
போட்டியாளர்களில் 8 பேர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் தென் அமெரிக்காவையும், ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. போட்டியாளர்களில் 6 பேர் பெண்கள் என தெரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐ.நா. பொதுச்செயலாளராக எந்த ஒரு பெண்ணும் பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.