சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..!

255

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் முன் ஜாமீன் கோரிய உமா உள்பட 10 பேரின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. கூடுதலாக மதிப்பெண் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் உமா உள்பட 10 பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மனுதாரரின் வழக்கறிஞர் முன்ஜாமின் மனுக்களை திரும்ப பெற்றனர். இதனால் 10 பேரின் முன் ஜாமுன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.