உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு.

245

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் நோக்கமல்ல என திமுக பொருளார் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சையில் திமுக சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக பொருளார் ஸ்டாலின் வந்தபோது, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்தியில் ஆட்சியும் பாஜக அரசு காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினர். அத்துடன், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் நோக்கம் அல்ல என குறிப்பிட்ட அவர், தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதை ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து டெல்லிக்கு அழைத்து செல்வது எதிர்கட்சியின் பணியல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.