நாடு முழுவதும் 22 விமான நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

180

நாடு முழுவதும் 22 விமான நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான், தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள், டெல்லி உட்பட 22 விமான நிலையங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் தணை ராணுவப் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு கொண்டு வரும் பொருட்களை முழுமையாக பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் மேலும் 100 தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.