உலக யானைகள் தினத்தையொட்டி சத்தியமங்கலத்தில் யானைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

220

உலக யானைகள் தினத்தையொட்டி சத்தியமங்கலத்தில் யானைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் யானைகளை பாதுகாப்பது, யானைகளின் உயிரிழப்பை தடுப்பது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வனத்துறையினர் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விவசாய தோட்டங்களில் நுழையும் யானைகளை தடுக்க உயர் அழுத்த மின்சாரத்தை மின்வேலியில் பாய்ச்சுவதை தவிர்க்கவேண்டும் எனவும், யானைகளின் இனப்பெருக்க காலத்தில் வனப்பகுதிகளை ஒட்டிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், வனவிலங்குகள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.