பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பொது வாக்குப்பதிவின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

179

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்காக, பிரிட்டனில் நேற்று பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்து, பிரிட்டன் வரலாற்றில் நடந்த மூன்றாவது மக்கள் கருத்து வாக்குப்பதிவு இதுவாகும். இதற்காக கடந்த 4 மாதங்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த தேர்தலில் 45 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். தற்போது அதன் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மொத்தம் 382 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. 32 மையங்களின் வாக்குப்பதிவு முடிவுகள் தற்போது தெரியவந்துள்ளன. இதில் 46 சதவீதம் மக்கள் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் எனவும், 54 சதவீதம் மக்கள் வெளியேறவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.