நாடு முழுவதும் இயங்கி வரும் 24 போலி பல்கலைகழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

2118

நாடு முழுவதும் இயங்கி வரும் 24 போலி பல்கலைகழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் போலி கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், மாணவர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில், போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் நாடு முழுவதும் 24 பல்கலைக் கழகங்கள் இயங்குவதாக UGC தெரிவித்துள்ளது. இவற்றில் 8 பல்கலைக் கழகங்கள் டெல்லியிலும், 7 பல்கலைக்கழகங்கள் உத்தரப்பிரதேசத்திலும் உள்ளன. புதுச்சேரி, அலிகர், பீகார், ரோர்கேலா, ஒடிசா, கான்பூர், மதுரா, பிரதாப்கர், நாக்பூர், கேரளா, கர்நாடகா ஆகியோவற்றில் தலா ஒரு பல்கலைக்கழகங்களையும், அலகாபாத்தில் 2 பல்கலைகழகங்களும் போலியானவை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.