மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

81

காங்கேயம் அருகே மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்..

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினநாளை முன்னிட்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பள்ளி கல்வி த்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி உள்பட அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.