உடுமலைப்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி 35 லட்சம் ரூபாய் மோசடி | மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை …!

278

உடுமலைப்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் அவரது மனைவி வெங்கடேஷ்வரியும் சேர்ந்து ஏலச்சீட்டு தொழிலை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சீட்டு முடிந்த பின்னரும் அந்த தம்பதியினர் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். முத்துகுமாரிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு பணத்தை திருப்பி கேட்டால் தற்கொலை செய்வதாக கூறி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், 35 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முத்துகுமார் தம்பதியினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருவரிடமிருந்து இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.