பெரும்பான்மையை நிரூபித்து 3 ஆண்டுகளுக்கு ஆட்சியை தொடருவோம் : உடுமலை ராதாகிருஷ்ணன்

330

தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, 3 ஆண்டுகளுக்கு ஆட்சியை தொடருவோம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த விரும்பினாரோ, அதை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து வருவதாக கூறினார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும், 3 ஆண்டுகளுக்கு ஆட்சியை தொடருவோம் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.