பட்டப்பகலில் தீப்பிடித்து எரிந்த சொகுசுக்கார்..!

119

உடுமலையில் பட்டப்பகலில் சொகுசுக்கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பூங்கா அருகே உள்ள மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் 3 பேர் சொகுசுக்காரில் வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவரிடம் குழந்தையைக் காட்டிவிட்டு, புறப்பட்டபோது, காரின் ஏசியை இயங்கச் செய்ததும், அதில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து, காரில் இருந்தவர்கள் அவசரமாக கீழே இறங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த சென்ற தீயணைப்புத்துறையினர் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.