ஜெ. மறைவுக்கு பின் அதிமுக அரசுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

134

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தொழில் வர்த்தக பொருட்கள் கண்காட்சி விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவின் செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் கருத்துக்களை கூறி வருவதாக தெரிவித்தார். அரசியலில் கூட்டணி என்பது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்படும் முடிவு என்றும் கூறினார். பா.ஜ.க எதிராக கூறி வரும் தம்பிதுரையின் ஒத்த கருத்து அதிமுகவின் ஒட்டு மொத்த கருத்தை பாதிக்காது என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.