மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக அதிமுக இருக்கும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

372

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக அதிமுக இருக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை திருமங்கலம் பேருந்து நிலையத்தில் 6 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயக்குமார் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். அதன்பின் புல்லமுத்தார் கண்மாயினை குடிமராமத்து செய்யும் பணியை பூஜை செய்து தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் குடிசை மற்றும் வீட்டுவசதி வாரியம் மூலம் 10 ஆயிரம் குடியிருப்புகள் வர உள்ளதாக கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழர்களுக்கு பங்கு உண்டு என புகழாரம் சூட்டிய உதயகுமார், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக அதிமுக உள்ளதாக தெரிவித்தார்.