லஞ்சம் கொடுத்து அழிவு திட்டங்கள் நிறைவேற்றுவதாக சுப.உதயகுமார் புகார்..!

273

இந்தியாவில் அழிவு திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, திட்டங்களை நிறைவேற்றி வருவதாக அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் சுப.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகை மாவட்டம் நாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காரைக்கால் துறைமுகத்தில் அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். எனவே நிலக்கரி இறக்குமதியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கூறிய சுப.உதயகுமார், குத்தகை எடுக்கும் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் அழிவு திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனைக் கண்டித்து தமிழக முழுவதும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் இயக்கங்களை ஒன்றிணைந்து காரைக்கால் துறைமுகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட போவதாக சுப.உதயகுமார் தெரிவித்தார்.