புயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..!

168

கஜா புயலினை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை எழிலகத்தில் இன்று காலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கஜா புயலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்தும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டள்ளதாக தெரிவித்தார்.