மழையை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

220

எதிர்வரும் மழையை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழை காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட கிராமங்கள், விளைநிலங்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் தொடர்பாக புள்ளி விபரமாக எடுத்துரைத்தார். மேலும், எதிர்வரும் மழைக்கு கடந்த ஆண்டு அறிக்கையை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.