தீர்ப்பு வரும் வரை ஆதாரை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது – உச்சநீதிமன்றம் ..!

564

ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை தீர்ப்பு வரும் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக நலத்திட்டங்களை பெற செல்போன் மற்றும் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால் இது தொடர்பான தீர்ப்பு வரும் வரை ஆதாரை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு மட்டுமே ஆதார் எண்ணை கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.