15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி..!

549

15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.
தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு சார்பில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, வங்கதேசம், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்றன. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் அணி ஒரு கோல் அடித்தது. தொடர்ந்து இரு அணிகளும் கோல்களை அடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டது. போட்டியின் இறுதிவரை இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் வங்கதேசம் அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.